செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு உலக கோப்பையில் இதுவரை அடிக்கப்பட்ட சதங்கள் – ஒரு பார்வை…

உலக கோப்பையில் இதுவரை அடிக்கப்பட்ட சதங்கள் – ஒரு பார்வை…

உலக கோப்பையில் இதுவரை அடிக்கப்பட்ட சதங்கள் – ஒரு பார்வை… post thumbnail image
40 ஆண்டுகால உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை குவிக்கப்பட்ட சதங்கள்,மற்றும் அது பற்றிய ருசிகர தகவல்கள் ஒரு பார்வை:-

*இதுவரை 12 நாடுகளை சேர்ந்த வீரர்கள் மொத்தம் 127 சதங்களை உலக கோப்பையில் அடித்துள்ளனர். இவற்றில் 22 சதங்கள் தோல்வியில் முடிந்திருக்கிறது. முதலாவது சதத்தை 1975–ம் ஆண்டு உலக கோப்பை தொடக்க ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்தின் டென்னிஸ் அமிஸ் (137 ரன்) அடித்தார்.

*ஒவ்வொரு உலக கோப்பை வாரியாக எடுக்கப்பட்ட சதங்களின் எண்ணிக்கை: 1975–6 சதம், 1979–2, 1983–8, 1987–11, 1992–8, 1996–16, 1999–11, 2003–21, 2007–20, 2011–24.

*அதிகபட்சமாக ஆஸ்திரேலிய வீரர்கள் தரப்பில் 22 சதங்களும், இந்தியா சார்பில் 20 சதங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

*இந்திய மண்ணில் அதிக சதங்கள் (30) எடுக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் 27 சதங்களும், தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீசில் தலா 20 சதங்களும் அடிக்கப்பட்டுள்ளன.

*தனிநபரில் அதிகபட்ச எண்ணிக்கையாக இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர் 6 சதங்களுடன் முதலிடம் வகிக்கிறார். ஆஸ்திரேலியாவின் ரிக்கிபாண்டிங் 5 சதங்களுடன் 2–வது இடத்திலும், இந்தியாவின் சவுரவ் கங்குலி, ஆஸ்திரேலியாவின் மார்க் தலா 4 சதங்களுடன் 3–வது இடத்திலும் இருக்கிறார்கள்.

*ஆஸ்திரேலியாவின் மார்க் வாக் (1996–ம் ஆண்டு), இந்தியாவின் சவுரவ் கங்குலி (2003–ம் ஆண்டு), ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடன் (2007) ஆகியோர் ஒரு உலக கோப்பையில் அதிக சதங்கள் (தலா 3) அடித்தவர்கள் ஆவர்.

*1983–ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் கபில்தேவ் 175 ரன்கள் குவித்ததே உலக கோப்பையில் இந்தியாவின் ‘கன்னி’ சதமாகும்.

*1992–ம் ஆண்டு உலக கோப்பை தொடரின் போது, ஜிம்பாப்வே விக்கெட் கீப்பர் ஆன்டி பிளவர் ஒரு நாள் கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தார். இலங்கைக்கு எதிரான அறிமுக ஆட்டத்தில் சதமும் (115 ரன்) கண்டார். உலக கோப்பையில் ஒரு நாள் போட்டியில் அறிமுகமாகி முதல் ஆட்டத்திலேயே சதத்தை சுவைத்த ஒரே வீரர் ஆன்டி பிளவர் தான்.

*2011–ம் ஆண்டு பெங்களூரில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அயர்லாந்து வீரர் கெவின் ஓ பிரையன் 50 பந்துகளில் 100 ரன்களை தொட்டது அதிவேக சதமாகும்.

*1996–ம் ஆண்டு உலக கோப்பையில் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு எதிராக தென்ஆப்பிரிக்காவின் கேரி கிர்ஸ்டன் திரட்டிய 188 ரன்களே இந்த நாள் வரை அதிகபட்சமாக நீடிக்கிறது.

*உலக கோப்பை இறுதி ஆட்டங்களில் இதுவரை 6 செஞ்சுரி எடுக்கப்பட்டுள்ளன. இதில் 2011–ம் ஆண்டு இறுதி ஆட்டத்தில் இலங்கையின் மஹேலா ஜெயவர்த்தனே (103 ரன்) விளாசிய சதத்திற்கு மட்டும் பலன் கிட்டவில்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி