அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் சொத்து குவிப்பு வழக்கில் பஞ்சாப் முன்னாள் மந்திரிக்கு 3 ஆண்டு சிறை!…

சொத்து குவிப்பு வழக்கில் பஞ்சாப் முன்னாள் மந்திரிக்கு 3 ஆண்டு சிறை!…

சொத்து குவிப்பு வழக்கில் பஞ்சாப் முன்னாள் மந்திரிக்கு 3 ஆண்டு சிறை!… post thumbnail image
சண்டிகார்:-பஞ்சாப்பில் சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் சுசாசிங் லன்கா. இவர் முதல்–மந்திரி பிரகாஷ் சிங் பாதல் மந்திரி சபையில் 1997 முதல் 2002 வரை பொதுப் பணித்துறை மந்திரியாகவும், 2007 முதல் 2012–ம் ஆண்டு வரை வேளாண்மைத்துறை மந்திரியாகவும் இருந்தார். 2002–ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. அப்போது இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் விடுதலையானார்.

லன்கா மீதான வழக்கு விசாரணை மொகாலியில் உள்ள மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. அவருடன் சேர்ந்து மேலும் 6 பேர் மீதும் வழக்கு விசாரணை நடந்தது. நீதிபதி டி.எஸ்.ஜோகல் முன் விசாரணை நடந்தது. நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது லன்காவுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.1.10 கோடி அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். அவருடன் சேர்த்து அம்ரிக்சிங் என்பவருக்கும் 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர். கோர்ட்டுக்கு வந்த சுசாசிங் லன்கா கூறும்போது, தீர்ப்பை எதிர்த்து சண்டிகார் ஐகோர்ட்டில் அப்பீல் செய்வேன் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி