வெலிங்டன்:-உலக கோப்பை கிரிக்கெட்டில் எந்த அணி வெற்றி பெறும் என்பதை நியூசிலாந்தின் கான்டர்பெரி பல்கலைக்கழகம் உருவாக்கிய ‘இக்ரம்’ என்ற ரோபோட் மூலம் ஆரூடம் நடத்தப்பட்டது. இதன் முடிவு அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியது.
வரிசையாக வைக்கப்பட்ட 14 நாடுகளின் கொடிகளையும் பார்வையிட்ட ரோபோட் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளின் கொடிகளை எடுப்பது போன்று வந்து தவிர்த்து விட்டது. கடைசியில் ஆப்கானிஸ்தான் தான் உலக கோப்பையை வெல்லும் என்று அதற்குரிய கொடியை ரோபோட் தேர்வு செய்தது. கத்துக்குட்டி அணியான ஆப்கானிஸ்தான் உலக கோப்பையில் விளையாட இருப்பது இது தான் முதல் முறையாகும். பயிற்சி ஆட்டத்தில் அந்த அணி இந்தியாவிடம் உதை வாங்கியது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி