அலகாபாத்:-உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் உள்ள ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு எதிராக சுஷில்குமார் மிஸ்ரா என்ற வக்கீல் புகார் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், இந்தியாவில் மத சகிப்பின்மை அதிகரித்து வருவதாக கூறியதன் மூலம், மதசார்பற்ற நாடான இந்தியாவின் நற்பெயரை ஒபாமா களங்கப்படுத்தி விட்டதாக கூறப்பட்டுள்ளது.
எனவே, ஒபாமாவுக்கு ‘சம்மன்’ அனுப்பி வரவழைத்து, இ.பி.கோ. 500-வது பிரிவின் (அவதூறுக்கான தண்டனை) கீழ், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்த புகார் மீது 18ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று மாஜிஸ்திரேட்டு நீலிமா சிங் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி