செய்திகள்,விளையாட்டு ஒருநாள் தர வரிசையில் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து முதலிடம்!…

ஒருநாள் தர வரிசையில் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து முதலிடம்!…

ஒருநாள் தர வரிசையில் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து முதலிடம்!… post thumbnail image
துபாய்:-ஒவ்வொரு போட்டி தொடர் முடிவிலும் அணிகள் மற்றும் வீரர்களின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டு வருகிறது. முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி முடிந்ததும் வெளியிடப்பட்ட தர வரிசையில், முத்தரப்பு போட்டியில் தோல்வியை சந்திக்காமல் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணி (120 புள்ளிகள்) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி நம்பர் ஒன் அந்தஸ்துடன் களம் காணுகிறது.

இந்திய அணி (114 புள்ளிகள்) 2-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா (113 புள்ளிகள்) 3-வது இடத்திலும், இலங்கை அணி (109 புள்ளிகள்) 4-வது இடத்திலும், இங்கிலாந்து அணி (104 புள்ளிகள்) 5-வது இடத்திலும், நியூசிலாந்து அணி (101 புள்ளிகள்) 6-வது இடத்திலும், பாகிஸ்தான் அணி (96 புள்ளிகள்) 7-வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் அணி (94 புள்ளிகள்) 8-வது இடத்திலும், வங்காளதேச அணி (75 புள்ளிகள்) 9-வது இடத்திலும், ஜிம்பாப்வே அணி (53 புள்ளிகள்) 10-வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் (41 புள்ளிகள்) 11-வது இடத்திலும், அயர்லாந்து அணி (34 புள்ளிகள்) 12-வது இடத்திலும் இருக்கின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி