சண்டிகார்:-சம்பள உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுத்துறை வங்கி ஊழியர்கள் கடந்த 7ம் தேதி வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டு இருந்தனர். ஆனால் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததால் அந்த வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று சண்டிகாரில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனால் பொதுத்துறை வங்கிகள் வருகிற 21ம் தேதி முதல் 4 நாட்களுக்கு வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி