புதுடெல்லி:-ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 5 கட்டமாக போராட்டம் நடத்தி வந்த வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர். 9 வங்கி ஊழியர் மற்றும் அலுவலர் சங்கங்கள் இணைந்த சங்கம் (யுஎப்பியு) இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. சுமார் 10 லட்சம் பேர் ஸ்டிரைக்கில் ஈடுபட திட்டமிட்டிருந்ததால் நாடு முழுவதும் வங்கிப் பணிகள் முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தும்படி மத்திய தொழிலாளர் ஆணையம் அறிவுறுத்தியது. அதன் அடிப்படையில் மும்பையில் நேற்று மாலை பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்திய வங்கிகள் சங்கம், ஊழியர்களுக்கான ஊதிய உயர்வை 12.5 சதவீதம் வரை வழங்க முன்வந்துள்ளது.
தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால் ஸ்டிரைக்கை தள்ளி வைப்பதாக வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முரளி தெரிவித்தார். வங்கிகள் வழங்க முன்வந்த ஊதிய உயர்வை ஏற்க தொழிற்சங்கங்கள் மறுத்துள்ள நிலையில், இன்றும் பேச்சுவார்த்தை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி