அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் இலங்கை அதிபர் தேர்தலில் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது: 8ம் தேதி ஓட்டுப்பதிவு!…

இலங்கை அதிபர் தேர்தலில் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது: 8ம் தேதி ஓட்டுப்பதிவு!…

இலங்கை அதிபர் தேர்தலில் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது: 8ம் தேதி ஓட்டுப்பதிவு!… post thumbnail image
கொழும்பு:-இலங்கையில் வருகிற 8ம் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. அதில் தற்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சே 3–வது தடவையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளராக மைத்ரி பாலசிறீசேனா களம் இறக்கப்பட்டுள்ளார். இவர்கள் தவிர மேலும் 16 பேர் போட்டியிடுகின்றனர். இருந்தாலும் இவர்களுக்கு இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. இவர்கள் இருவரும் இலங்கையில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகின்றனர்.

அதிபர் ராஜபக்சேவுக்கு ஆதரவாக இந்தி நடிகர் சல்மான்கான் இலங்கை சென்று பிரசாரம் செய்தார். மேலும் அவருக்கு சிங்கள நடிகர்– நடிகைகளும் பிரசாரம் மேற்கொண்டனர். பொது வேட்பாளர் மைத்ரிபாலா சிறீசேனாவுக்கு முன்னாள் அதிபர் சந்திரிகா, முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் பிரசாரம் செய்தனர். தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் இன்று இறுதிகட்ட பிரசாரம் நடக்கிறது. பிரசாரம் இன்று மாலையுடன் முடிகிறது. எனவே அதிபர் ராஜபக்சேவும், மைத்ரிபாலா சிறீசேனாவும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர் ஓட்டுப்பதிவு வருகிற 8–ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது.

மைத்ரிபாலா சிறீசேனாவுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. ராஜபக்சே அரசில் பதவி வகித்த 6 அமைச்சர்கள் பதவி விலகி அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 2 முஸ்லிம் கட்சிகளும் அவரை ஆதரிக்கின்றன. மேலும் பெரிய மைனாரிட்டி கட்சியாக திகழும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இவருக்கு ஆதரவு அளித்துள்ளது. இதனால் அவர் உற்சாகத்துடன் பிரசாரம் செய்து வருகிறார்.
மக்களிடையே செல்வாக்கு குறைந்து வந்த நிலையில் முன்னதாக தேர்தல் நடத்தி எளிதாக வெற்றி பெறலாம் என நினைத்து ராஜபக்சே தனது பதவிக்காலம் இன்னும் 2 ஆண்டு இருக்கும் நிலையில் முன்னதாக தேர்தலை அறிவித்தார். இதற்காக இலங்கை அரசியல் சட்டத்தை திருத்தி தான் 3–வது முறையாக போட்டியிடுகிறார். ஆனால் அவர் எதிர் பார்த்தது போல் நடக்கவில்லை. அவரது அரசில் சுகாதார மந்திரியாக இருந்த மைத்ரிபாலா சிறீசேனா எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக எதிர்த்து களத்தில் குதித்தார். அவருக்கு தமிழர்கள் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு அளித்துள்ள நிலையில் அதிபர் ராஜபக்சே இந்த தேர்தலில் கடும் போட்டியை சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி