முதலில் இந்த தியேட்டர் ஜி.உமாபதியால் கட்டப்பட்டது. இவர் அண்ணாசாலையில் இருந்த இன்னொரு தியேட்டரான ஆனந்த் தியேட்டர் உரிமையாளர் ஆவார். அப்போதைய முதல்-அமைச்சராக இருந்த பெருந்தலைவர் காமராஜர் சாந்தி தியேட்டரை திறந்து வைத்தார். இந்த தியேட்டரில் திரையிடப்பட்ட முதல் படம் தூய உள்ளம். 2005ல் தியேட்டரை புதுப்பித்தனர். ரஜினியின் சந்திரமுகி படம் இங்கு திரையிடப்பட்டு 888 நாட்கள் ஓடியது. சிவாஜி நடித்த கர்ணன் படம் டிஜிட்டிலில் புதுப்பிக்கப்பட்டு இங்கு திரையிட்டனர். 50 நாட்கள் அப்படம் ஓடியது.
சென்னையில் ஏற்கனவே பழமையான பாரகன், சித்ரா, வெலிங்டன், அலங்கார், ஆனந்த், சபையர், புளுடைமன்ட், எமரால்டு, சன்கெயிட்டி, உமா, மேகலா, ராக்கி, புவனேஸ்வரி, வசந்தி, ராஜகுமாரி, நாகேஷ் உள்ளிட்ட பல தியேட்டர்கள் இடிக்கப்பட்டு வணிக வளாகங்களாகவும், அபார்ட்மெண்ட் குடியிருப்புகளாகவும் மாறிவிட்டன. இப்போது சாந்தி தியேட்டரும் வணிக வளாகமாகிறது. இந்த வளாகத்தில் நான்கு சிறு திரை அரங்குகளும் கட்டப்படுகின்றன. விரைவில் இதற்கான பணிகள் துவங்க உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி