சென்னை:-நடிகர் விஜய் எப்போதும் மனதில் பட்டதை எங்கும் கூறிவிடுவார். அந்த வகையில் சமீபத்தில் எஸ்.ஜே.சூர்யா இயக்கிய ‘இசை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இவர் மிகவும் நெகிழ்ச்சியுடன் பேசினார்.
இதில், எனக்கு ‘குஷி’க்கு முன் வாழ்வா சாவா என்கிற நிலை இருந்தது. இந்தப் படமும் ஓடவில்லை என்றால் என்னாகும் என்ற கேள்வி இருந்தது. அந்த நேரத்தில் ‘குஷி’ என்கிற வெற்றிப் படம் கொடுத்து என்னைத் தூக்கிவிட்டவர் சூர்யா. இப்போது அதற்கு நன்றி சொல்கிறேன் என்று நெகிழ்ச்சியுடன் பேசி முடித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி