செய்திகள்,திரையுலகம் நடிகர் அஜித் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்த ஆர்யா!…

நடிகர் அஜித் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்த ஆர்யா!…

நடிகர் அஜித் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்த ஆர்யா!… post thumbnail image
சென்னை:-நடிகர் ஆர்யாவை வைத்து யட்சன் படத்தை இயக்கி வருகிறார் விஷ்ணுவர்தன். யுடிவி மோஷன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தில் ஆர்யாவுடன் இணைந்து தன் தம்பி கிருஷ்ணாவையும் நடிக்க வைக்கிறார் விஷ்ணுவர்தன். பிரபல வார இதழ் ஒன்றில் எழுத்தாளர்கள் சுபா எழுதிய தொடர்கதையைத்தான் சினிமாவுக்காக சின்னச்சின்ன மாற்றங்கள் செய்து யட்சன் படமாக உருவாக்கி வருகிறார்கள்.

யட்சன் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்தில், அஜித் ரசிகர் மன்றத் தலைவராக ஆர்யா நடிப்பதால் கௌரவ தோற்றத்தில் அஜித் நடிக்க இருக்கிறார் என்ற செய்தி அடிபட்டது. பின்னர் அது வதந்தி என்று தெரிய வந்தது. அதே சமயம் அஜித் நடிக்காவிட்டாலும், அவரது ரசிகர் மன்ற தலைவராக ஆர்யா நடிப்பது உண்மைதான். யட்சன் படத்தின் ஒரு காட்சியில் வீரம் படத்திற்காக வைக்கப்பட்ட மிகப்பெரிய கட்அவுட் மேல் ஏறி ஆர்யா பாலாபிஷேகம் செய்வது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இந்தக் காட்சியில் ஆர்யா உடன் உண்மையான தல ரசிகர்கள் கலந்து கொண்டு நடித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி