புதுடெல்லி:-இந்திய அணியில் இருந்து ஷேவாக், காம்பீர் ஆகியோர் ஒரங்கட்டப்பட்டனர். உள்ளூர் போட்டியில் விளையாடி வரும் அவர்கள் அதிலும் சொபிக்கவில்லை. உள்ளூர் போட்டியான தியோதர் டிராபி கிரிக்கெட் போட்டிக்கான வடக்கு மண்டல அணி தேர்வு இன்று நடக்கிறது. இந்நிலையில் வடக்கு மண்டல அணி தேர்வில் எங்களது பெயர்களை பரிசீலிக்க வேண்டாம் என்று ஷேவாக், காம்பீர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
வடக்கு மண்டல அணி தேர்வு தலைவர் விக்ரம் ரத்தோரிடம் இது பற்றி கூறியுள்ளனர். ஜூனியர் வீரர்களை தேர்வு செய்வதற்காக தான் விலகி இருப்பதாக ஷேவாக் கூறியதாகவும், காம்பீர் ஏன் விலகினார் என்று தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி