செய்திகள்,திரையுலகம் நடிகர் விஜய்யின் 58வது படம் துவங்கியது!… இளவரசி கெட்டப்பில் ஹன்சிகா…

நடிகர் விஜய்யின் 58வது படம் துவங்கியது!… இளவரசி கெட்டப்பில் ஹன்சிகா…

நடிகர் விஜய்யின் 58வது படம் துவங்கியது!… இளவரசி கெட்டப்பில் ஹன்சிகா… post thumbnail image
சென்னை:-நடிகர் விஜய்யை நாயகனாக வைத்து சரித்திர ஃபேண்டஸி படத்தை இயக்குகிறார் சிம்புதேவன். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை கிழக்குக் கடற்கரை சாலை, பண்ணையூர் அருகே போடப்பட்டுள்ள மாபெரும் செட்டில் துவங்கியது. முதன் முதலில் நடிகர் விஜய் 100 நடனக் கலைஞர்களுடன் பங்கேற்கும் ஒரு பாடலின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறதாம். படப்பிடிப்பில் கலந்துகொண்ட ஹன்சிகா, இப்படம் குறித்து ‘டுவீட்’ செய்திருக்கிறார்.

அதில், விஜய் 58 பாடல் படப்பிடிப்பு… செட், காஸ்டியூம், தயாரிப்புச் செலவு என எல்லாமே மலைக்க வைக்கிறது… அருமையான தொடக்கம் என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார். வீரபாண்டி கோட்டையிலேயே எனத் தொடங்கும் அந்தப் பாடலில் ஹன்சிகா இளவரசி கெட்டப்பில் உடையணிந்து நடித்தாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி