பெரும்பாலான மருத்துவர்கள், மருந்துகள் குறித்து தகவல் அறிய மருத்துவ பத்திரிக்கைகள் மற்றும் மருத்துவ பிரதிநிதிகளை சார்ந்து உள்ளனர். மருத்துவர்களுக்கு மருந்துகளின் தன்மை குறித்த தெளிவான தகவல் இல்லாததால் அவர்கள் மருந்துகளின் பக்க விளைவுகளை அறியாமலேயே நோயுற்றவர்களுக்கு அதனை பரிந்துரைக்கும் நிலை ஏற்படுகிறது. இந்திய மருத்துவக் கழக பத்திரிகையில் 2011 டிசம்பர் முதல் 2012 நவம்பர் வரை கொடுக்கப்பட்ட 145 மருந்துகளுக்கான 54 விளம்பரங்களில், இரண்டு விளம்பரங்களில் மட்டும் மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் குறித்த தகவல் இருந்தது. 2 விளம்பரங்களில் மருந்தின் பக்க விளைவுகள் குறிப்பிடப்பட்டிருந்தன. மருந்து உபயோகிப்பதற்கு முன் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து இரண்டு விளம்பரங்கள் தெரிவித்திருந்தன.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த எம்.ஜி.எம் மருத்துவ கல்லூரி மற்றும் எல்.எஸ்.கே மருத்துவமனை ஆய்வாளர்கள், அனைத்து விளம்பரங்களிலும் மருந்துகளின் பிராண்ட் பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், ஆனால் அவற்றில் வெறும் 61 சதவீத விளம்பரங்கள் மட்டும் மருந்தின் மருத்துவ சிகிச்சை பயன்கள் குறித்த தகவலை தெரிவித்ததாகவும் கூறியுள்ளனர். மருந்துகள் குறித்த தகவலுக்கு மருத்துவ பத்திரிகை விளம்பரங்களை சார்ந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில், மருத்துவர்கள் நோயுற்றவர்களுக்கு மருந்துகள் பரிந்துரைக்கும் போது அதிக கவனத்துடன் செயல்படுமாறு இந்திய மருத்துவ கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி