சென்னை:-ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு நடிகர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கும் படம் ‘டூரிங் டாக்கீஸ்’. முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இப்படம் பற்றி இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் கூறுகையில், என் இளமைகால அனுபவம் தான் படம். இப்படத்தில் இரண்டு விதமான கதை அமைந்துள்ளது. இடைவேளைக்கு முன் ஒரு கதையும், இடைவேளைக்கு பிறகு ஒரு கதையும் இருக்கும்.
சிம்லா, ஜெய்ப்பூர் போன்ற இடங்களில் இப்படத்தை எடுத்து வருகிறேன். இப்படத்திற்கு இளையராஜா இசையமைப்பது மிகப்பெரிய பலம். டூரிங் டாக்கீஸ் படத்தில் விஜய்யை கெஸ்ட் ரோலில் நடிக்க வைப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறியுள்ளார் எஸ்.ஏ.சி.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி