செய்திகள்,திரையுலகம் இன்னும் சில மணி நேரங்களில் ட்விட்டர், பேஸ்புக் டிரெண்டில் லிங்கா!…

இன்னும் சில மணி நேரங்களில் ட்விட்டர், பேஸ்புக் டிரெண்டில் லிங்கா!…

இன்னும் சில மணி நேரங்களில் ட்விட்டர், பேஸ்புக் டிரெண்டில் லிங்கா!… post thumbnail image
சென்னை:-லிங்காவின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து விட்டது. கடைசிநாள் படப்பிடிப்பில் பூசணிக்காய் உடைப்பார்கள். அதன்படி லிங்கா படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் நடந்தபோது பூசணிக்காயும் உடைத்துவிட்டனர். லிங்கா படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தபோதே, இடையிடையே எடிட்டிங் வேலைகளை 90 சதவிகிதம் முடித்து விட்டனராம். பிறகு பாக்கி எடிட்டிங் வேலையை முடித்துள்ளனர்.

ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ஆம் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை துரிதப்படுத்தியுள்ளனர். படத்தின் டீஸர், டிரைலர் வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. லிங்கா டீஸர் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது.ஆக,ட்விட்டர், ஃபேஸ்புக்கில் டிரெண்டில் இருக்கும் லிங்கா இடம் பிடிக்க இன்னும் சில மணி நேரங்களே உள்ளன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி