காரணம், இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 தென்னிந்திய மொழிகளிலும் தயாராகிறது. இதில் தமிழ், மலையாளத்தில் டைரக்டர் சமுத்திரகனியே ஹீரோவாக நடிக்க, தெலுங்கு, கன்னடத்தில் கிஷோர் நாயகனாக நடிக்கிறார். ஆனால், இந்த 4 மொழிகளிலும் கதாநாயகியாக தன்ஷிகாதான் நடிக்கிறாராம். அதனால் ஒரே கல்லில் நான்கு மாங்காய் அடிக்கப்போகிறோம் என்ற மகிழ்ச்சியுடன் இப்படத்தில் நடிப்பதற்கு தன்னை தயார்படுத்திக்கொண்டு வருகிறார் தன்ஷிகா.
இந்த படத்தில் ஒரே கதையை ரசிகர்களுக்கு ஒரு விதமாகவும், கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு அனுப்ப இன்னொரு விதமாகவும் எடுக்கப்போகிறாராம் சமுத்திரகனி. அதோடு, இரண்டு மாதிரியான படத்தையும் தியேட்டர்களுக்கும் வெளியிடுகிறாராம். அதாவது, ரசிகர்களுக்காக எடுக்கும் படத்தை 100 தியேட்டர்களிலும், விருதுக்காக எடுக்கப்படும் படத்தை 50 தியேட்டர்களிலும் பிரித்து வெளியிடவும் திட்டமிட்டிருக்கிறாராம் சமுத்திரகனி.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி