புதுடெல்லி:-தென்கொரியாவின் இன்சியோன் நகரில் நடந்த பாரா-ஆசியப் போட்டியில் தடகள வீராங்கனை பி.டி.உஷாவின் 28 ஆண்டு கால சாதனையை முறியடித்தார் பாரா-நீச்சல் வீரர் சரத் கயாக்வாத். ஆசியப் போட்டி மல்டி டிசிப்லின் ஈவெண்ட்களில் அதிக பதக்கங்களை வென்ற பி.டி.உஷா கடந்த 1986 ஆசியப்போட்டியில் 5 பதக்கங்களை வென்றதே முந்தைய சாதனையாக இருந்து வந்தது.
இந்நிலையில், பாரா-நீச்சல் வீரர் சரத் கயாகத் 6 பதக்கங்களை வென்று புதிய சாதனை படைத்துள்ளார். 200 மீட்டர் தனி மெட்லி பிரிவில் வெள்ளிப்பதக்கத்துடன் வெற்றியை துவங்கிய சரத் 100 மீட்டர் பட்டர்பிளை, 100 மீட்டர் பிரெஸ்ட் ஸ்ட்ரோக், 100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் மற்றும் 50 மீட்டர் ஃப்ரீ ஸ்டைலில் அடுத்தடுத்து வெண்கல பதக்கங்களை குவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி