செய்திகள்,திரையுலகம் ‘கத்தி’ திரைப்படத்தினால் கேரளா விநியோகஸ்தருக்கு நஷ்டம்!…

‘கத்தி’ திரைப்படத்தினால் கேரளா விநியோகஸ்தருக்கு நஷ்டம்!…

‘கத்தி’ திரைப்படத்தினால் கேரளா விநியோகஸ்தருக்கு நஷ்டம்!… post thumbnail image
சென்னை:-தீபாவளியன்று திரைக்கு வந்த ‘கத்தி’ படம் முதல் நாளில் மட்டும் 23.5 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பெருமையடித்துக் காண்டார். அதற்கேற்றவாறு, தமிழகத்தில் பட்டிதொட்டி எங்கும் இப்படத்திற்கு வரவேற்பு கிடைத்தது. இதனால், சந்தோஷத்தில் இருக்கிறது கத்தி டீம். தமிழ்நாட்டில் வெற்றியடைந்த கத்தி படம் கேரளாவில் 1 கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று கேரள விநியோகஸ்தர்கள் வட்டாரம் கூறி இருக்கிறது.

தீபாவளியன்று கத்தி படம் கேரளாவில் 120 திரையரங்குகளில் வெளியிடப்பட்டு, 1 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்ததாகவும், ஆனால் இரண்டாம் நாளான வியாழக்கிழமை 50 லட்சத்திற்கும் குறைவாகவே வசூல் செய்திருப்பதாகவும், இதனால் இப்படம் கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாகவும் கூறுகிறார்கள். கத்தி திரைப்படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை சுமார் 4.5 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது. வழக்கமாக பெரிய ஹீரோக்களுடைய தமிழ் படங்களின் கேரள உரிமை 2 கோடியிலிருந்து 2.5 கோடி வரைக்கும்தான் விற்கப்படும்.

ஆனால், சமீபகாலமாக இந்த தொகை 4 கோடிக்கும் அதிகமாகிவிட்டது. சூர்யா நடித்து மிகப்பெரிய தோல்வியடைந்த அஞ்சான் படத்தின் கேரளா ரைட்ஸ் 4 கோடிக்கும் மேல் விலைபோனது. அப்படத்தை வாங்கியவருக்கு மிகப்பெரிய நஷ்டம். அஞ்சான் படத்தை வாங்கியவருக்கு ஏற்பட்டதைப் போலவே கத்தி படத்தை வாங்கியவருக்கும் நஷ்டம் வரும் என்பதே தற்போதைய நிலவரம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி