ஆனால் இதைப்பற்றி ஜெயம்ரவியைக் கேட்டால், நயன்தாரா நல்ல நடிகை. அவரது நடிப்பை நான் ரசித்திருக்கிறேன். மற்றபடி அவருடன் குஷியுடன் நடிக்கிறேன் என்று சொல்ல முடியாது. காரணம், அவர் நல்ல பர்பாமென்ஸ் ஆர்ட்டிஸ்ட். அதனால் அவருடன் போட்டி போட்டுத்தான் நடித்துக்கொண்டிருக்கிறேன். மற்றபடி நான் என்னுடன் நடிக்கும் அனைத்து நடிகைகளுடனும் உயிர்த்தோழராகி விடுவேன் என்று சொல்வதும் தவறு. என்னைப்பொறுத்தவரை எல்லோரிடமும் இயல்பாக பழகுவேன்.
மற்றபடி அந்தந்த படங்களில நடித்து முடித்தும் அவர்கள் யாரோ நான் யாரோ என்றாகி விடுவோம். ஆனால் ஜெனிலியா மட்டும்தான் எனது பெஸ்ட் ப்ரண்ட்.அவருடன் சந்தோஷ் சுப்பிரமணியன் படத்தில் நடித்தபோது நல்ல தோழியாகி விட்டார். இப்போதும் அடிக்கடி போன் செய்து நலம் விசாரிப்பார். அந்த வகையில் எனது குடும்ப நண்பர் என்று சொல்லிக்கொள்ளக்கூடிய பெருமைக்குரிய நடிகை ஜெனிலியா என்கிறார் ஜெயம்ரவி.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி