ஒரு பெரிய ஹீரோவின் படத்தின் பட்ஜெட்டை உயர்த்திச் சொல்வதில் பின்னணியில் பல விஷயங்கள் இருக்கின்றன. ஹீரோவின் சம்பளம், படத்தின் வியாபாரம் இப்படி பல விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. ‘கத்தி’ படத்தின் தயாரிப்பாளர் மிகப் பெரிய கோடீஸ்வரர் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அதனால்தானோ என்னவோ படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு பாடலுக்கு 2.5 கோடி வரை செலவு செய்திருக்கிறார்.
‘கத்தி’ படத்தின் ஒரு பாடலுக்காக மும்பையில் லண்டன் சூழ்நிலையில் ஒரு பிரம்மாண்டமான அரங்கை அமைத்து 100 நடன நடிகர்களுடன் மிகவும் ரிச்சாக ஒரு பாடலைப் படமாக்கியிருக்கிறார்களாம். பாடலும் மிக அருமையாக வந்திருக்கிறதாம். அந்த ஒரு பாடலுக்குத்தான் 2.5 கோடி செலவு செய்திருக்கிறார்களாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி