செய்திகள் பசியெடுக்கும் வியாதி தொடர்ந்து உணவருந்தி குண்டாகும் சிறுவன்!…

பசியெடுக்கும் வியாதி தொடர்ந்து உணவருந்தி குண்டாகும் சிறுவன்!…

பசியெடுக்கும் வியாதி தொடர்ந்து உணவருந்தி குண்டாகும் சிறுவன்!… post thumbnail image
பிரேசிலியா:-பிரேசில் நாட்டை சேர்ந்த மைக்கேலின் மகன் மிசேலுக்கு வந்துள்ள வியாதி அவனை நாளுக்கு நாள் குண்டாகி வருவதுடன் அவனது எடையையும் தாறுமாறாக உயர்த்துகிறது.மூன்று வயதை எட்டியுள்ள அவன் தினமும் ஐந்து முதல் ஆறு தடவை உணவருந்தி வருவதாக தெரிவித்த அவனது பெற்றோர், ஆறு வேளைகளிலும் அவன் எடுத்துக்கொள்ளும் உணவும் மற்றவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவை விட இரு மடங்கு அதிகரித்துள்ளது என்று கூறுகின்றனர்.

பிறக்கும் போது 2.9 கிலோவாக இருந்த அவனது எடை ஒவ்வொரு மாதமும் 2.5 கிலோ உயர்ந்துவருதாக அவர்கள் கூறியுள்ளனர்.அவனை பரிசோதித்த மருத்துவர்கள் ப்ரேடர்-வில்லி சிண்ட்ரோம் என்ற நோய் அவனுக்கு இருப்பதாக கூறினர். இதன் காரணமாக அளவுக்கதிமாக பசி எடுப்பதுடன் எப்போதும் சாப்பிட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்று எண்ணத் தோன்றும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தற்போது மிசேலை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கே சிரமப்படுவதாக கூறியுள்ள அவனது தந்தை, அவ்வாறு மருத்துவமனைக்கு செல்லும்போது பலர் அவனுடன் புகைப்படம் எடுக்க ஆர்வத்துடன் வருவதாக கூறியுள்ளார்.இதனால் அவனுக்காகவே வீட்டில் கார் ஒன்றை மைக்கேல் வாங்கியுள்ளார். எனினும் அவனுக்கு வந்த நோயை தான் யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி