செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் பெட்ரோல், டீசல் விலை குறைகிறது!…

பெட்ரோல், டீசல் விலை குறைகிறது!…

பெட்ரோல், டீசல் விலை குறைகிறது!… post thumbnail image
புதுடெல்லி:-சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை ஏற்ற – இறக்கத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதுதொடர்பாக இந்திய எண்ணை நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்து மத்திய அரசுக்கு சிபாரிசு செய்து அறிவிப்பு வெளியிடும்.

தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை குறைந்துள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களின் விலையை குறைக்க எண்ணை நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1.50–க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.1–ம் குறையலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி