செய்திகள்,திரையுலகம் அமீர்கான் வழியில் நடிகர் ஹிருத்திக் ரோஷன்!…

அமீர்கான் வழியில் நடிகர் ஹிருத்திக் ரோஷன்!…

அமீர்கான் வழியில் நடிகர் ஹிருத்திக் ரோஷன்!… post thumbnail image
மும்பை:-ஹிருத்திக் ரோஷன், தனது புதிய நண்பரும், சகநடிகருமான அமீர்கானின் அறிவுரையை ஏற்று நடக்க தொடங்கிவிட்டார். அவரது அறிவுரையை ஏற்று ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்பதை குறைத்துவிட்டு, பேங் பேங் படத்தின் புரொமோஷன் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அமீர்கானின் தூம்-3 படத்தின் டீசருக்கு கிடைத்த வரவேற்பை போன்று, பேங் பேங் படத்தின் டீசருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

குறிப்பாக பேங் பேங் படத்தின் ஆக்ஷ்ன் மற்றும் பாடல்களுடன் ஹிருத்திக்-கத்ரீனாவில் கெமிஸ்ட்ரியும் சிறப்பாக வந்துள்ளது. தூம்-3 படத்திற்கு செய்யப்பட்ட புரொமோஷனால், அந்தப்படம் மாபெரும் ஹிட்டாக அமைந்ததுடன் வசூலையும் வாரி குவித்தது. தூம்-3-யை போலவே இப்போது பேங் பேங் படத்திற்கும் புரொமோஷன் வேலைகள் ரொம்ப தீவிரமாக நடந்து வருகிறது. அதனால் இந்தப்படமும் வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி