செய்திகள்,திரையுலகம் நடிகர் விஜய்யை மீண்டும் டென்சன் செய்த ரசிகர்கள்!…

நடிகர் விஜய்யை மீண்டும் டென்சன் செய்த ரசிகர்கள்!…

நடிகர் விஜய்யை மீண்டும் டென்சன் செய்த ரசிகர்கள்!… post thumbnail image
சென்னை:-ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைதண்டனையை கோர்ட் அறிவித்திருப்பதை அடுத்து, எதிர்க்கட்சிகள் இனிப்பு வழங்கி கொண்டாடியது போன்று விஜய் ரசிகர்களும் கொண்டாடினார்களாம். இதற்கு காரணம், கடந்த எம்எல்ஏ தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக விஜய் தனது ரசிகர்களை ஓட்டளிக்க வைத்தபோதும், அவர் படங்கள் வெளியாகும் நேரங்களில் ஏதேனும் பிரச்னைகளை ஆளுங்கட்சியினர் ஏற்படுத்தி வருவதுதான். ஆனபோதும், அதையெல்லாம் மனதில் கொண்டு இப்படி ரசிகர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடியது விஜய்க்கு பிடிக்கவில்லையாம்.

இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு பற்றி எந்தவித விவாதங்களிலும் நீங்கள் ஈடுபடக்கூடாது என்று விஜய் ரசிகர்களுக்கு அறிவிப்பு வெளியிட்டது போன்று அவரது ரசிகர்கள் ஒரு போலியான அறிக்கையினையும் பேஸ்புக்கில் வெளியிட்டு விஜய்க்கு இன்னும் பெரிய டென்சனை ஏற்படுத்தி விட்டுள்ளார்களாம்.இதனால் பிரச்னைகள் பெரிதாகும் முன்பே ரசிகர் மன்றங்களை கூப்பிட்ட பேச வேண்டும் என்று விஜய் வட்டாரம் பலத்த ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறதாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி