செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் எபோலா தடுப்பு ஊசி இந்த ஆண்டு இறுதிக்குள் தயாராகும் – உலக சுகாதாரக் கழகம் அறிவிப்பு!…

எபோலா தடுப்பு ஊசி இந்த ஆண்டு இறுதிக்குள் தயாராகும் – உலக சுகாதாரக் கழகம் அறிவிப்பு!…

எபோலா தடுப்பு ஊசி இந்த ஆண்டு இறுதிக்குள் தயாராகும் – உலக சுகாதாரக் கழகம் அறிவிப்பு!… post thumbnail image
டகர்:-கடந்த பிப்ரவரி மாதம் மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் தென்படத் தொடங்கிய எபோலா என்னும் விஷத் தொற்றுநோய் அண்டை நாடுகளான லைபீரியா, சியரா லியோனிலும் விரைவாகப் பரவத் தொடங்கியது. மொத்தம் ஐந்து ஆப்பிரிக்க நாடுகளைத் தாக்கியுள்ள இந்த நோயினால் 2000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில், 5800க்கும் மேற்பட்டோர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

எபோலா நோய்க்கென முறைப்படுத்தப்பட்ட சிகிச்சை முறையோ, தடுப்பூசிகளோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றபோதும் இரண்டு தடுப்பூசிகள் மீது தற்போது விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் தற்போது பரவிவரும் நோயைக் கட்டுப்படுத்தும்விதமாக குறிப்பிட்ட காலத்திற்குள் மருந்து தயாராவது சாத்தியமில்லை என்று அவர்கள் கூறி வந்தனர்.

ஆனால், இன்று வெளிவந்துள்ள அறிக்கையின்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் போதுமான அளவு தடுப்பு மருந்துகள் தயாராகும் என்று உலக சுகாதாரக் கழகம் அறிவித்துள்ளது. இந்தத் தயாரிப்பானது மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் பரவிவரும் எபோலா நோயைக் கட்டுப்படுத்த உதவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி