செய்திகள்,திரையுலகம் குழந்தையின் உயிரை காப்பாற்றிய நடிகர் சிம்பு!…

குழந்தையின் உயிரை காப்பாற்றிய நடிகர் சிம்பு!…

குழந்தையின் உயிரை காப்பாற்றிய நடிகர் சிம்பு!… post thumbnail image
சென்னை:-பல சர்ச்சைகளுக்கு பேர் போனவர் நடிகர் சிம்பு. இவர் கதாநாயகன் ஆனதில் இருந்தே பல கிசுகிசுக்கள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.தற்போது சிம்பு ஒரு ஹோட்டலில் நடிகை ஹர்ஷிகாவிற்கு பொது இடத்தில் முத்தம் கொடுப்பதுபோல் வெப் கேமராவில் பதிவாகியுள்ள படம் இண்டர்நெட்டில் வேகமாக பரவி வருகிறது.

இப்படி ஒரு பக்கம் பல சர்ச்சைகள் மற்றும் கிசுகிசுக்களில் சிக்கி வந்தாலும், மறுபக்கம் சத்தமே இல்லாமல் பல நல்ல விசயங்களை செய்து வருகிறார். சமீபத்தில் அப்படி அவர் செய்த உதவியை பேஸ்புக் பக்கத்தில் அவரால் பயனடைந்தவரே கூறியுள்ளார். இதில் மருத்துவமனையில் உயிருக்கு போராடிய தன் குழந்தையை சிம்பு காப்பாற்றினார் என்று அதில் தெரிவித்திருந்தார். மேலும் சிம்புவிற்கு மனப்பூர்வமான நன்றியும் கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி