மும்பை:-6-வது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் வருகிற 13ம் தேதி முதல் அக்டோபர் 4ம் தேதி வரை நடக்கிறது. இதில் தகுதி சுற்று ஆட்டம் ராய்ப்பூரில் வருகிற 13ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடக்கிறது. இதன் பிரதான சுற்று ஆட்டம் வருகிற 17ம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் காயம் காரணமாக சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் போட்டியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித்ஷர்மா விலகினார். இதையடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கேப்டன் பதவிக்கான பிரதான போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா (இலங்கை), ஆல்-ரவுண்டர் பொல்லார்ட் (வெஸ்ட் இண்டீஸ்), சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் (இந்தியா) ஆகியோர் இருந்தனர். இந்நிலையில், பொலார்டை கேப்டனாக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி