செய்திகள்,திரையுலகம் பட்டைய கௌப்பணும் பாண்டியா (2014) திரை விமர்சனம்…

பட்டைய கௌப்பணும் பாண்டியா (2014) திரை விமர்சனம்…

பட்டைய கௌப்பணும் பாண்டியா (2014) திரை விமர்சனம்… post thumbnail image
பாப்பணாம்பட்டி-பழனி செல்கிற மினி பஸ் டிரைவராக இருக்கிறார் விதார்த். இவருடைய சகோதரரான சூரி அதே பஸ்ஸில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் செல்லும் பஸ்ஸில் பயணம் செய்யும் மனிஷா யாதவை ஒருதலையாக காதலித்து வருகிறார் விதார்த். ஒருநாள் இவருடைய காதலை அவளிடம் சொல்கிறார். ஆனால், அவள் அதை ஏற்றுக்கொள்வதாக இல்லை.இந்நிலையில், மனிஷா யாதவின் வீட்டுக்கு சென்று அவளை பெண் கேட்கும் படி விதார்த்துக்கு ஆலோசனை கூறுகிறார் சூரி. அதன்படி, அவரும் மனிஷா யாதவ் ஊருக்கு செல்கிறார். அப்போது அந்த ஊரில் ஒரு பெண்மணியை சிலர் மிரட்டுவதை கண்டதும், அவர்களை தட்டிக்கேட்டு விரட்டியனுப்புகிறார் விதார்த். அதன்பிறகுதான் தெரிகிறது அந்த பெண்மணி மனிஷா யாதவின் அம்மா என்று. விதார்த்தின் மீது அவளது வீட்டில் நல்ல மதிப்பு கிடைத்ததும், தன் குடும்ப சூழ்நிலையை விதார்த்திடம் விளக்குகிறாள் மனிஷா யாதவ்.

கண் தெரியாத அக்கா, உடல்நிலை சரியில்லாத அம்மா இவர்களை வைத்துக் கொண்டு என்னுடைய வாழ்க்கையை நினைத்துப் பார்க்கமுடியவில்லை. அதற்காகத்தான் காதலை பற்றி யோசிக்காமல் என்னுடைய வேலையிலேயே கவனம் செலுத்தி வருகிறேன் என்று கூறுகிறாள். இதையெல்லாம் கேட்ட விதார்த், இனிமேல் அவளை தொந்தரவு செய்யமாட்டேன் என்று சொல்லிவிட்டு செல்கிறார். தனது வேலையை விட்டுவிட்டு வீட்டிலேயே இருக்கிறார்.விதார்த் வேலையை விட்டு சென்றதை அறிந்ததும், மனிஷா யாதவ் அவனை தேடி செல்கிறாள். அவனை சந்தித்து, தான் அவனை காதலிப்பதாக கூறுகிறாள். இதைகேட்டதும் விதார்த் சந்தோஷமடைகிறான். ஆனால், தனது பார்வையற்ற சகோதரிக்கு திருமணம் செய்து வைத்தபிறகுதான் நாம் திருமணம் செய்துகொள்ள முடியும் என்று கூறுகிறாள்.இதனால், தனது காதலியின் குடும்பதை தனது குடும்பமாக நினைத்தது பார்வையற்ற நாயகியின் சகோதரிக்கு திருமணம் செய்து வைக்க முழு மூச்சுடன் இறங்குகிறார் விதார்த். இந்த திருமணத்தை நடத்திவைக்க அவருக்கு ஏகப்பட்ட சிக்கல்கள் வருகிறது.இறுதியில் இந்த சிக்கல்களையெல்லாம் தகர்த்து நாயகியின் அக்காவுக்கு திருமணம் செய்து வைத்து, விதார்த் தனது காதலியை கரம்பிடித்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

மினி பஸ் டிரைவராக வரும் விதார்த் அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். தனது காதலிக்காக இவர் செய்யும் செயல்கள் ஒரு பொறுப்பான காதலனாக நம் கண்முன்னே நிறுத்துகிறது. நர்சாக வரும் மனிஷா யாதவ் வெள்ளை உடையில் பளிச்சென இருக்கிறார். பாடல் காட்சிகளில் கவர்ச்சிக்கு குறை வைக்கவில்லை.விதார்த்துக்கு இணையான கதாபாத்திரத்தில் சூரி கலக்கியிருக்கிறார். கதையில் எங்கு காமெடி தேவைப்படுமோ அதற்கேற்றார்போல் சூரியை பயன்படுத்தியிருப்பது இயக்குனரின் சிறப்பு. விதார்த்தின் அம்மா, அப்பாவாக வரும் கோவை சரளா-இளவரசு கூட்டணி வரும் காட்சிகள் கலகலப்பூட்டுகின்றன. அதேபோல், மினி பஸ் உரிமையாளராக வரும் இமான் அண்ணாச்சி வரும் காட்சிகளும் கலகலப்பு.காமெடி படம், ரொம்ப ஜாலியாக சிரித்துவிட்டு வரலாம் என்று நம்பி தியேட்டருக்கு போகும் ரசிகர்களை ஏமாற்றாமல், நல்ல பொழுதுபோக்கான, ஜாலியான படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் எஸ்.பி.ராஜ்குமார். முதல் பாதி ஜாலியாக பயணிக்கும் கதை, இரண்டாம் பாதியில் சீரியஸாக செல்கிறது. ஆனாலும், கதையோடு வரும் காமெடிகள் ரசிக்க வைக்கிறது. அருள் தேவ் இசையில் படம் பார்க்கும் வரையில் ரசிக்க வைக்கின்றன. ஆனால், தியேட்டரை விட்டு வெளியே வந்ததும் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசையும் பரவாயில்லை. மூவேந்தர் ஒளிப்பதிவில் பழனி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை படமாக்கியது அருமை.

மொத்தத்தில் ‘பட்டைய கௌப்பணும் பாண்டியா’ வெற்றி…………

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி