செய்திகள் சவுதி அரேபியாவில் 3 லட்சம் ரியால்களுக்கு ஏலம் போன செல்போன் நம்பர்!…

சவுதி அரேபியாவில் 3 லட்சம் ரியால்களுக்கு ஏலம் போன செல்போன் நம்பர்!…

சவுதி அரேபியாவில் 3 லட்சம் ரியால்களுக்கு ஏலம் போன செல்போன் நம்பர்!… post thumbnail image
ரியாத்:-சவுதி அரேபிய அரசுக்கு சொந்தமான சவுதி தொலைத்தொடர்பு நிறுவனம் சிறப்பு எண்களை கொண்ட சிம் கார்டுகளை அவ்வப்போது ஏலத்தில் விட்டு வருகின்றது.இந்த ஏலத்தில் பங்கேற்கும் செல்வந்தர்கள் வீம்புக்காகவும், தங்களது வசதி மற்றும் கவுரவத்தை நிரூபிப்பதற்காகவும் ஏகப்பட்ட விலை கொடுத்து சில வி.ஐ.பி. நம்பர்களை வாங்குகின்றனர்.

அவ்வகையில், தலைநகர் ரியாத்தில் பல சிறப்பு எண்கள் ஏலத்தில் விடப்பட்டன.சிறப்பு எண்களுக்கான குறைந்தபட்ச ஏலத்தொகை 5 ஆயிரம் ரியால்களாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.ஏலத்தில் பங்கேற்கவும், வேடிக்கை மட்டும் பார்க்கவும் ஆயிரக்கணக்காண மக்கள் கூடி விட்டனர்.6 ஆயிரம், 7 ஆயிரம் என்று உயர்ந்துக் கொண்டே போன ஏலம், மெல்ல லட்சம் ரியால்களை எட்டியது. அதன் பின்னரும், படிப்படியாக ஏறுமுகத்தில் போன ஏலம் இறுதியாக 3 லட்சம் ரியாலில் (இந்திய மதிப்புக்கு சுமார் 48 லட்சம் ரூபாயில்) முடிவடைந்தது.
0539000000 என்ற அந்த சிறப்பு வி.ஐ.பி. நம்பரை வாங்கிய நபர் யார். என்ற விபரம் உடனடியாக வெளியிடப்படவில்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி