செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் உலக நாடுகளின் முயற்சியால் ஒசோன் ஓட்டை குறைந்து வருகிறது – ஐ.நா. தகவல்!…

உலக நாடுகளின் முயற்சியால் ஒசோன் ஓட்டை குறைந்து வருகிறது – ஐ.நா. தகவல்!…

உலக நாடுகளின் முயற்சியால் ஒசோன் ஓட்டை குறைந்து வருகிறது – ஐ.நா. தகவல்!… post thumbnail image
ஐக்கிய நாடுகள்:-புற்றுநோயை உருவாக்கக்கூடிய சூரியனின் அல்ட்ரா வயலட் கதிர்கள் பூமியைத் தாக்கா வண்ணம் அதன் மேற்புறத்தில் காணப்படும் ஒசோன் மண்டலத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டையானது மிகுந்த பாதிப்பினை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்து வந்தனர்.அண்டார்டிகா பகுதியின் மேற்பரப்பில் இந்த ஓட்டையானது மிகவும் பெரியதாகக் காணப்பட்டது. மனிதனால் உருவாக்கப்படும் சிஎப்சி என்ற கரியமில வாயு அதிகரித்துள்ளதே இதற்குக் காரணம் என்று கருதப்பட்டதால் இதனைக் கட்டுப்படுத்துவதற்கான பல நடைமுறைகளை உலக நாடுகள் பலவும் மேற்கொண்டுவந்தன.

இதனைத்தொடர்ந்து சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் மெலிந்திருந்த ஓசோன் படலம் மீண்டும் தடிமனாகத் தொடங்கியுள்ளதன் அறிகுறிகள் தென்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுபோல் அண்டார்டிகா பகுதியில் தொடர்ந்து அதிகரித்துவந்த ஓசோன் துவாரத்தின் விரிவாக்கமும் தற்போது தடைப்பட்டுள்ளது என்று ஐ.நா. விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.இந்த ஆய்வு முடிவுகள் உலக வானிலை ஆராய்ச்சி அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டத்தின் ஆராய்ச்சியாளர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

ஓசோன் படலம் குறித்த சர்வதேச நடவடிக்கை பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதுபோல் காலநிலை மாற்றங்களைக் கையாளுவதிலும் உலக நாடுகள் ஒற்றுமையையும், அவசரத்தையும் வெளிப்படுத்தி செயல்படவேண்டும் என்று டபிள்யுஎம்ஓ பொது செயலாளர் மைக்கேல் ஜர்ரார்ட் குறிப்பிட்டார்.
ஓசோன் படலத்தில் காணப்படும் இடைவெளி தானே முற்றிலுமாக மூடிக்கொள்ளுமா என்பதுகுறித்து விஞ்ஞானிகளால் உறுதியாகக் கூற இயலவில்லை.இருப்பினும் தங்கள் அமைப்பின் சோதனை முடிவுகள் டபிள்யுஎச்ஓவின் கண்டுபிடிப்புகளை கூடுதல் வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் என்று பிரிட்டிஷ் அண்டார்டிகா சர்வே மையத்தைச் சேர்ந்த பேராசிரியர் டேவிட் வாகன் குறிப்பிட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி