செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் நடிகர் விஜய், முருகதாஸை நாங்கள் எதிர்க்கவில்லை – தமிழ் அமைப்புகள் அறிவிப்பு!…

நடிகர் விஜய், முருகதாஸை நாங்கள் எதிர்க்கவில்லை – தமிழ் அமைப்புகள் அறிவிப்பு!…

நடிகர் விஜய், முருகதாஸை நாங்கள் எதிர்க்கவில்லை – தமிழ் அமைப்புகள் அறிவிப்பு!… post thumbnail image
சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் கத்தி. இந்த படத்தை ராஜபக்சேவுக்கு நெருக்கமான சுபாஸ்கரன் அல்லிராஜாவின் லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த தகவல் உறுதியானதை அடுத்து 65 தமிழ் அமைப்புகள் கத்தி படத்துக்கு எதிராக போர்க்கொடி பிடித்து வருகின்றன. ஆனால், வருகிற 18ம் தேதி கத்தி படத்தின் ஆடியோவை வெளியிட்டு, படத்தை தீபாவளிக்கு வெளியிடும் வேலைகளில் அப்படக்குழு தீவிரமடைந்திருக்கிறது.

இந்நிலையில், தமிழ் அமைப்புகள் ஒன்றுகூடிய ஒரு கூட்டம் சமீபத்தில் நடந்தது. அப்போது, கத்தி, புலிப்பார்வை படங்கள் பற்றிய விவாதம் நடைபெற்றுள்ளது. அதையடுத்து அவர்கள் விடுத்துள்ள செய்தியில்,புலிப்பார்வை படத்தில் ஆட்சேபத்திற்குரிய காட்சிகளைப் பார்த்து விட்டு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். அதனால் நாங்கள் குறிப்பிட்டுள்ள காட்சிகளை நீக்கி விடுவதாக அவர்கள் உறுதி அளித்துள்ளனர். அதோடு படத்தை மீண்டும் திரையிட்டு காட்டுவதாகவும் கூறியுள்ளனர். அதனால் அப்படத்தை பார்த்த பிறகே எதிர்ப்பதா? வேண்டாமா? என்பது பற்றி முடிவெடுப்போம்.

கத்தி படத்தைப் பொறுத்தவரை அந்த படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனத்தை தான் நாங்கள் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம்.அதேசமயம, கத்தி படத்தை லைகா நிறுவனம் தவிர வேறு ஏதாவது நிறுவனங்கள் வெளியிட்டால் எங்களது எதிர்ப்பை விலக்கிக் கொள்வோம் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், கத்தி படத்தில் பணியாற்றி உள்ள விஜய், ஏ.ஆர்.முருகதாசை நாங்கள் எதிர்க்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி