இந்த கருவி தகவல்களை திருடும் ஹேக்கர்கள் மற்றும் உங்கள் கருவி ஆகியவற்றுக்கு இடையே பாதுகாப்பு தரும் அம்சமாக இருக்கும். இதனை நியூயார்க்கை சேர்ந்த இன்ட்3.சிசி என்ற பாதுகாப்பு நிறுவனம் உருவாக்கியுள்ளது. சமீப காலங்களில் தனிநபரின் கருவியில் உள்ள தகவல்களை திருடுவது என்பது அதிகரித்து வருகிறது. யு.எஸ்.பி. கம்பிகள் ஆனது பல்வேறு கம்பிகளை ஒன்றாக இணைத்து அவை பாதுகாப்பாக மூடப்பட்டிருக்கும். அவை ஒவ்வொன்றும் வேறுபட்ட பணியை செய்ய கூடியவை. அவற்றில் இரண்டு மின்சாரத்தை வழங்குவதற்கும் மற்றவை தகவல்கள் பரிமாற்றத்திற்கும் என செயல்படும். ஒரு ஸ்மார்ட்போனை கணினியுடன் இணைப்பில் வைத்திருக்கும்போது, போனில் உள்ள தகவல்கள் அனைத்தும் எடுத்து கொள்ளப்படும் அச்சுறுத்தல் உள்ளது என்று பாதுகாப்பு நிறுவனம் ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
அவற்றில் ஆவணங்கள் மற்றும் பாதுகாப்பிற்காக எடுத்து வைக்கப்பட்ட பல்வேறு தகவல்களும் திருடப்படும் அபாயம் உள்ளது. யு.எஸ்.பி. காண்டம் என்ற இந்த புதிய கருவி சிறிய சிப் போன்று இருக்கும்.அதில் உள்ள இரு வகை போர்ட்டுகள் ஒரு கருவி மற்றும் மற்றொரு அடையாளம் தெரியாத எந்தவொரு யு.எஸ்.பி. போர்ட் ஆகியவற்றை இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன. இவை, தகவல்கள் பரிமாறப்படும் விசயங்களை துண்டித்து விடுவதுடன் மின்சாரம் மட்டும் வழங்கும் பணியை சிறப்பாக ஆற்றுகின்றன. இந்த கருவி தற்பொழுது ஜிபிட்டர் என்ற ஆன்லைன் தகவல் பாதுகாப்பு குழுவால் ஒன்றின் விலை 10 அமெரிக்க டாலர் என்ற மதிப்பில் விற்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி