சென்னை:-கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘வேங்கடாத்திரி எக்ஸ்பிரஸ்’, இது ரெயிலிலேயே நடக்கும் ஒரு பிரயாண காதல் கதை. ரொமாண்டிக் காமெடி படம். சந்தீப் கிஷன், ராகுல் ப்ரீத்தி சிங், பிரேம்ஜி, தகுபொத்து ரமேஷ் ஆகியோர் நடித்திருந்தார்கள். மெர்லபகா காந்தி இயக்கி இருந்தார். 10 கோடியில் எடுக்கப்பட்ட படம் 50 கோடி சம்பாதித்தது.
தற்போது இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார்கள் முத்துநகர் எக்ஸ்பிரஸ் அல்லது பொதிகை எக்ஸ்பிரஸ் என்று பெயர் சூட்டப்படலாம். ஆதி ஹீரோ. ஹீரோயின் தொழில்நுட்ப கலைஞர்கள் இன்னும் முடிவாகவில்லை. ஹீரோயினாக அநேகமாக ராகுல் ப்ரீத்தி சிங்கே இருக்கலாம்.தற்போது ஆதி நடித்து வரும் யாகாவாராயினும் நாகாக்க படத்தை தயாரித்து வரும் அதர்ஷா சித்ராலயா நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரிக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி