இந்நிலையில் பவன் கல்யாண் படம் அச்சடிக்கப்பட்ட 50 ரூபாய் கள்ள நோட்டு இணைய தளத்தில் பரவி உள்ளது. இதுகுறித்து ஐதராபாத்தைச் சேர்ந்த வியாபாரி ராஜு என்பவர் எல்.பி.நகர் போலீசில் புகார் செய்து உள்ளார்.அதில் சமூக வலை தளத்தில் பவன் கல்யாண் புகைப்படத்துடன் கூடிய 50 ரூபாய் நோட்டு வெளியாகி உள்ளது. நோட்டில் உள்ள காந்தி படத்தை அகற்றிவிட்டு அந்த இடத்தில் பவன்கல்யாண் படம் அச்சடிக்கப்பட்டு உள்ளது. அந்த நோட்டு பிரிண்ட் எடுக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டு உள்ளார்.புகாருடன் அந்த ரூபாய் நோட்டு பிரதியையும் அவர் கொடுத்து உள்ளார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் இந்த நோட்டு விநியோகத்துக்கும் பவன் கல்யாணத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிய வந்தது. அவரது ரசிகர்கள் யாராவது வேடிக்கையாக இதனை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். புகார் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி