செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் ரஜினியின் ‘லிங்கா’ படப்பிடிப்பை ரத்து செய்ய கோரிக்கை!…

ரஜினியின் ‘லிங்கா’ படப்பிடிப்பை ரத்து செய்ய கோரிக்கை!…

ரஜினியின் ‘லிங்கா’ படப்பிடிப்பை ரத்து செய்ய கோரிக்கை!… post thumbnail image
சென்னை:-ஷிமோகா மாவட்டம், சாகரா தாலுகாவில் உள்ள நாட்டின் முக்கிய நீர்மின் உற்பத்தி மையமான லிங்கனமக்கி அணை அருகில் நடந்து வரும், ‘லிங்கா’ திரைப்படத்தின் படப்பிடிப்பை ரத்து செய்யக்கோரி, ஷிமோகா சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூட்டமைப்பு, முதல்வர் சித்தராமையாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஷிமோகாவின் துணை கலெக்டர் நாகராஜ் மூலம், முதல்வர் சித்தராமையாவுக்கு அனுப்பப்பட்டுள்ள கோரிக்கை மனுவில், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளதாவது:ஆசியா கண்டத்திலேயே, மிக குறைந்த செலவில், நீர்மின் உற்பத்தி செய்யும் பெருமை, லிங்கனமக்கி அணைக்குள்ளது. இந்த அணையின் மீது, இப்போது அனைவரின் பார்வையும் பதிந்துள்ளது.இந்த அணையின் சுற்றுப்பகுதிகளில், பொது மக்கள், சுற்றுலா வாசிகள் நுழைய, தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த தடை செய்யப்பட்ட இடத்தில், ரஜினிகாந்த் நடிக்கும், ‘லிங்கா’ திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு, அரசு அனுமதி அளித்திருப்பது, விவேகமற்ற செயலாகும்.மாநில அரசு, உடனடியாக லிங்கனமக்கி அணை அருகில் நடந்து கொண்டிருக்கும் படப்பிடிப்பை ரத்து செய்ய வேண்டும். ஏற்கனவே, அந்த இடத்தில் நடந்துள்ள படப்பிடிப்பின் ரீல்களை வசப்படுத்த வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி