செய்திகள்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் இமயமலையில் அதிசய மூலிகை: சஞ்சீவனி என தகவல்!…

இமயமலையில் அதிசய மூலிகை: சஞ்சீவனி என தகவல்!…

இமயமலையில் அதிசய மூலிகை: சஞ்சீவனி என தகவல்!… post thumbnail image
இந்திய விஞ்ஞானிகளுக்கு உடலில் பாதுகாப்பு அமைப்பை ஒழுங்குபடுத்தும் ஒரு அதிசயம் மூலிகை கிடைத்தது. உயிர்வாழ்வதற்கே கடினமான பகுதிகள் கொண்ட இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ள இந்த அதிசய மூலிகை கதிர்வீச்சு பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்றும். சவாலான வாழ்விடச் சூழலில் மக்களை பாதுகாத்து கொள்ளும் சக்தியை வழங்கும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூலிகை ராமாயணத்தில் அனுமார் கொண்டு வந்ததாகக் கருதப்படும் சஞ்சீவனி மூலிகை போன்று உள்ளது. என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து மூலிகை தொடர்பாக விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்திய இந்து மதம் காவியங்களில் சஞ்சீவினி மூலிகை உயிரினங்களுக்கு உயிர் கொடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ரோடியோலா என்ற அந்த மூலிகையை ஆய்வாளர்கள் சஞ்சீவினி மூலிகை என்றே கருதுகின்றனர். ரோடியோலா சீனா மற்றும் அமெரிக்க நாடுகளிலும் கண்டுபிடிக்கப்பட்ட்டுள்ளது. அங்கு மூலிகை மலைப்பிரதேசங்களில் உயிர்களைப் பாதுகாக்கும் பாரம்பரிய சீன மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. மங்கோலியாவில் மருத்துவர்கள் காசநோய் மற்றும் புற்றுநோய் அதனை பயன்படுத்துகின்றனர்.ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் லாடக் பகுதியில் இந்த மூலிகை ‘சோலோ’ என்று அழைக்கப்படுகிறது. லாடக்கில் உள்ள மனிதர்கள் இதன் இலைகளை உணவுப் பொருட்களாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த மூலிகையின் அரிய குணங்கள் இன்னும் கண்டுபிடிக்கப் படாமலே உள்ளது. மலைப்பகுதி ஆய்வுக்கான ராணுவ அமைப்பின் விஞ்ஞானிகள் இதன் மருத்துவ குணங்களை ஆராய்ந்து வருகின்றனர்.

ரோடியோலா என்று அழைக்கப்படும் இந்த மூலிகை உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. கடினமான வாழ்விடச் சூழலில் நம்மை தகவமைத்துக் கொள்வதற்கான சக்தியை வழங்குகிறது. மேலும், ரேடியோ கதிர் வீச்சு விளைவுகளில் இருந்தும் பாதுகாக்கும். என்று ஆய்வுக் கழகத்தின் இயக்குநர் ஆர்.பி.ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.ரசாயன ஆயுதங்கள், வெடிகுண்டுகள் ஆகியவை வெளிப்படுத்தும் நச்சுக் கதிரியக்கத்தின் விளைவுகளையும் இந்த மூலிகை அகற்றும். மன உளைச்சல், கவலை ஆகியவற்றுக்கு சிறந்த நிவாரணியாகவும் இருக்கும். ஜீரண சக்திகளை மேம்படுத்தும் குணங்களும் இந்த மூலிகைக்கு இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். உலகின் மிக உயரமான போர்க்களமாக கருதப்படுவது ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் மாவட்டத்தில் உள்ள பனிசூழ்ந்த சியாச்சின் மலைப் பகுதியில் ஆகும். இந்த பகுதியை பாதுகாக்கும் பணியில் நமது ராணுவ வீரர்களுக்கு இந்த மூலிகை உதவியாக இருக்கும். ரோடியோலா மூலிகை குறித்து ஏற்கனவே பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஆய்வு செய்து வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி