ஐதராபாத்:-தெலுங்கானா மாநிலத்தின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள உள்ள விகாராபாத் நகரில் வசித்து வரும் 70 வயது மூதாட்டி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது சமையல் வேலை செய்யும் முஜாகித் என்ற இளைஞன் வீடு புகுந்து அந்த மூதாட்டியை கற்பழித்துள்ளான்.
இதுகுறித்து அந்த மூதாட்டி தன் மகனிடம் கூறியுள்ளார். அவரது மகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் முஜாகித்தை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.கோர்ட் உத்தரவுப்படி அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட அந்த மூதாட்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி