‘கத்தி’ படத்திற்கு பிறகு விஜய், சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் நடிக்கின்றனர். கன்னட நடிகர் சுதீப், ஸ்ரீதேவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நட்டு நடராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகளை வரும் செப்டம்பர் அல்லது அக்டோபரில் தொடங்கவுள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்புகளை கேரளாவில் உள்ள காட்டுப்பகுதிகளுக்குள் படமாக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக, சாலக்குடி, நெல்லியம்பதி காட்டு பகுதியில் லொக்கேஷன்களை தேர்வு செய்துள்ளனர். படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு வடஇந்தியாவில் முக்கிய இடங்களில் படமாக்க உள்ளனர். அதைத் தொடர்ந்து கேரளாவில் படமாக்கவுள்ளனர்.
இப்படத்தை எஸ்.கே.டி. ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 2015-ம் ஆண்டு கோடை விடுமுறையில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி