இதேபோன்று மோன்ட் கிரானியரில் நடைபெற்ற மற்றொரு சம்பவத்தில் 52 வயதுடைய பிரான்ஸ் நாட்டவர் ஒருவர் இறந்ததாகவும், அவர் இந்த விளையாட்டில் மிகவும் அனுபவம் பெற்றவர் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.வல் டெல்சரே என்ற பிரபல சுற்றுலா தளத்திற்கருகே மலை உச்சியிலிருந்து இவர் குதித்தபோது பாறையில் மோதியதால் மரணமடைந்தார் என்று கூறப்படுகின்றது. முதல் முயற்சியில் வெற்றி பெற்ற இவர் இரண்டாவது முறை குதிக்கும்போது அடிபட்டதாக மீட்புப் பணியில் ஈடுபட்ட ஒருவர் கூறினார். இந்த இரு மரணங்களையும் குறித்த விசாரணையை பிரான்ஸ் அரசு துவக்கியுள்ளது.
இந்த மாத துவக்கத்திலும் இதே போன்று நடந்த இரண்டு சம்பவங்களில் சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இருவர் இறந்துள்ளனர். இத்துடன் இந்த மாதம் நடைபெற்ற விபத்துகளில் மொத்தம் நால்வர் பலியானதாகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. பேஸ் ஜம்பிங் எனப்படுவது ஸ்கை டைவிங்கைவிட ஆபத்து நிறைந்த சாகச விளையாட்டு என்று நார்வே நாட்டு ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி