செய்திகள்,முதன்மை செய்திகள் மார்ச் 16, 2880 அன்று உலகம் அழியும்!… விஞ்ஞானிகள் கணிப்பு…

மார்ச் 16, 2880 அன்று உலகம் அழியும்!… விஞ்ஞானிகள் கணிப்பு…

மார்ச் 16, 2880 அன்று உலகம் அழியும்!… விஞ்ஞானிகள் கணிப்பு… post thumbnail image
நியூயார்க்:-அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளது. அதற்கு ‘1950 டி,ஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகாடன் எடையுள்ளது. 1 கிலோமீட்டர் அகலம் கொண்டதாக உள்ளது. இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் பூமியை நோக்கி பாய்ந்து வருகிறது.

இந்த விண்கல் 2,880–ம் ஆண்டில் பூமியை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மணிக்கு 38 ஆயிரம் மைல் வேகத்தில் பூமியை தாக்கும் என கணித்துள்ளனர்.இதனால் பூமிஅதிபயங்கர சத்தத்துடன் வெடிக்கும். தட்ப வெப்பநிலையில் மாற்றம் ஏற்பட்டு சுனாமி உள்ளிட்ட பேரழிவு ஏற்படும். அதன் மூலம் மனித குலம் அழியும் என்று தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் இந்த விண்கல் பூமியை மோதாமல் தடுக்க முடியும் என்றும் ஒரு தரப்பு விஞ்ஞானிகள் கருத்து கூறியுள்ளனர். மேலும் பூமியில் மோதுவதில் 300 –ல் ஒரு வாய்ப்பு தான் உள்ளது. என மற்றொரு தரப்பும் தெரிவித்துள்ளது. இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி