செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு ஆசிய விளையாட்டுக்கு தமிழக வீரர் நிகில் தகுதி!…

ஆசிய விளையாட்டுக்கு தமிழக வீரர் நிகில் தகுதி!…

ஆசிய விளையாட்டுக்கு தமிழக வீரர் நிகில் தகுதி!… post thumbnail image
பாட்டியாலா:-பெடரேஷன் கோப்பைக்கான தேசிய சீனியர் தடகள போட்டி பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான குண்டு எறிதலில் அரியானா வீரர் இந்திரஜித் 19.89 மீட்டர் தூரம் வீசி 12 ஆண்டு கால சாதனையை தகர்த்ததுடன் அடுத்த மாதம் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிக்கும் தகுதி பெற்றார்.

ஸ்டீபிள் சேஸ் போட்டியில் மராட்டிய வீராங்கனை லலிதா பாபர் (9:52.34 வினாடி), உத்தரபிரதேசத்தை சேர்ந்த சுதாசிங் (9:53.54 வினாடி) ஆகியோர் முறையே முதல் இரண்டு இடங்களை பிடித்ததுடன் ஆசிய விளையாட்டு போட்டிக்கான தகுதி இலக்கையும் எட்டிப்பிடித்தனர்.தமிழக வீரர் நிகில் சிற்றரசு 2.21 மீட்டர் உயரம் தாண்டி ஆசிய போட்டிக்கு தகுதி பெற்றார். டிரிபிள் ஜம்ப் பந்தயத்தில் கேரள வீராங்கனை பிரதியுஷா 13.39 மீட்டர் தாண்டி ஆசிய போட்டிக்குள் அடியெடுத்து வைத்தார். ஈட்டி எறிதலில் உத்தரபிரதேச வீராங்கனை அன்னு ராணி 58 மீட்டர் தூரம் வீசி ஆசிய போட்டிக்கு தகுதி கண்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி