நகைச்சுவை நடிகன் என்பவன் தனது கோபங்களை நகைச்சுவை என்ற முகமூடியின் மூலம் சமூகத்தின் மீது விமர்சனங்களை வைக்கின்றான். தொடர்ந்து வேடிக்கையான முகபாவத்தை வைத்துக்கொண்டிருப்பது மன அழுத்தத்தை தரும். அந்த வகையில் ராபின் வில்லியம்ஸ் இயற்கையான கண்ணீர் சிந்தி நடிப்பவர். அவரது படங்களில் அதை நாம் தெளிவாக காண முடியும்.
60-களில் அவர் நடித்திருந்தால் ஹீரோவாக உயர்ந்திருக்க முடியாது. ஏனென்றால் அக்காலத்து அமெரிக்க திரைப்பட கதாநாயகன்கள் திரையில் அழுவதற்கு பயப்படுவார்கள். ஆனால் வியட்நாம் போர் அவர்களது சுபாவத்தை மாற்றியது. ஆக்சன் ஹீரோவான ராம்போதான் முதன்முறையாக பீதியால் அழுது, அச்சத்தால் அலறும் நடிப்பை வெளிப்படுத்தினார். ராபின் வில்லியம்ஸ் ஆணின் அழுகைக்கு கண்ணியமான அர்த்தத்தை தந்தவர். அவரது திறமைக்காகவே நான் அவரை பெரிதும் விரும்புகின்றேன்.
ஆனால் அவரது மரணம் தற்கொலை என்பது உறுதியாகுமானால், தனது வாழ்நாள் முடியும் முன் வாழ்க்கையை முடித்துக்கொண்ட அவரை நான் வெறுக்கிறேன். திறமை வாய்ந்த நடிகரான அவரிடமிருந்து இம்முடிவை நான் எதிர்பார்க்கவில்லை. இந்த கருத்து எனது லட்சிய மனிதரான குரு தத்திற்கும் பொருந்தும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி