செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் இரண்டு வேடங்களில் நடிக்கும் பிரபல இயக்குனர்…!

இரண்டு வேடங்களில் நடிக்கும் பிரபல இயக்குனர்…!

இரண்டு வேடங்களில் நடிக்கும் பிரபல இயக்குனர்…! post thumbnail image
‘அஞ்சான்’ படத்திற்குப் பிறகு சூர்யா நடிக்கும் படம் ‘மாஸ்’. இப்படத்தை வெங்கட்பிரபு இயக்குகிறார். நயன்தாரா, எமி ஜாக்சன் இப்படத்தில் ஹீரோயின்களாக நடிப்பதாக கூறப்படுகிறது.

ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.சமுத்திரக்கனி இப்படத்தில் வில்லன் வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவர் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறுகிறது கோலிவுட் வட்டாரம். இரட்டை வேடத்தில் ஒன்று 30 வயதுள்ள கதாபாத்திரம், இன்னொன்று 60 வயது கதாபாத்திரமாம்.

இதற்குமுன் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் தனுஷிற்கு அப்பாவாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி