செய்திகள்,திரையுலகம் சிம்புவின் ‘இது நம்ம ஆளு’ தலைப்புக்கு பெண்கள் எதிர்ப்பு!…

சிம்புவின் ‘இது நம்ம ஆளு’ தலைப்புக்கு பெண்கள் எதிர்ப்பு!…

சிம்புவின் ‘இது நம்ம ஆளு’ தலைப்புக்கு பெண்கள் எதிர்ப்பு!… post thumbnail image
சென்னை:-பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் இது நம்ம ஆளு.சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றநிலையில், பிறகு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. வரும் 18ம் தேதி முதல் மீண்டும் இது நம்ம ஆளு படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில், இது நம்ம ஆளு படத்துக்கு மிகப்பெரிய எதிர்ப்பு அலை உருவாகி வருகிறது.

இது என்பது ஆடு, மாடு போன்ற மிருகங்களைக் குறிக்கும் அஃறிணை சொல்.அந்த வார்த்தையைக் கொண்டு பெண்களை குறிப்பதுபோல் இது நம்ம ஆளு என்ற தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இதை கண்டித்தும், தலைப்பை மாற்றச்சொல்லியும் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல இருக்கின்றன பெண்கள் அமைப்புகள். இந்த போராட்டத்தில் மாணவிகளை களத்தில் இறக்க வேண்டும் எண்ணத்தில் கல்லூரி மாணவிகளை ஒருங்கிணைத்து வருகிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி