செய்திகள்,திரையுலகம் ராமகிருஷ்ணா மிஷன் நடிகர் தனுசுக்கு கடிதம்!…

ராமகிருஷ்ணா மிஷன் நடிகர் தனுசுக்கு கடிதம்!…

ராமகிருஷ்ணா மிஷன் நடிகர் தனுசுக்கு கடிதம்!… post thumbnail image
சென்னை:-தனுஷ், அமலாபால் நடித்த வேலையில்லா பட்டதாரி படம் சமீபத்தில் வெளிவந்தது. இதில் ஒரு காட்சியில் ராமகிருஷ்ணா பள்ளிகளை குறைத்து மதிப்பிட்டு ஒரு வசனம் இடம்பெற்றிருந்தது. இதற்கு ராமகிருஷ்ணா பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள்.இந்நிலையில் சேலம் ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரம் செயலாளர் சுவாமி யதாத்மானந்தர் தனுசுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

அண்மையில் நீங்கள் நடித்து வெளிவந்திருக்கும் வேலையில்லா பட்டதாரி என்ற படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு வசனம் ராமகிருஷ்ணா மிஷன் நடத்தி வரும் பள்ளிகளின் தரத்தை இழிவுபடுத்தியும், புனித ஜான் பள்ளி எனும் கான்வெண்ட் பள்ளியின் தரத்தை பெருமைபடுத்தும் வகையில் அமைத்துள்ளதாக அறிந்தேன்.இது ஒரு தற்செயல் நிகழ்வுபோல தோன்றினாலும் இதில் அடங்கியுள்ள கருத்துக்கள் எவ்வளவு தீமையை விளைவிக்ககூடியது என்பதை படத்தின் இயக்குனரோ, தணிக்கைகுழு அதிகாரிகளோ அறியாமல் இருக்க முடியாது.

சுவாமி விவேகானந்தர் வகுத்த நெறியில் கல்வித்துறையிலும், பண்பாட்டை வளர்க்கும் பணியிலும் ராமகிருஷ்ணா மிஷன் ஈடுபட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள எங்கள் பள்ளியில் 5 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். இதை கருத்தில் கொண்டு படத்தில் இடம்பெற்றிருக்கும் வசனத்தை எல்லா பிரதிகளிலும் நீக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி