செய்திகள்,திரையுலகம் குறும்படம் இயக்குகிறார் நடிகை சுஹாசினி!…

குறும்படம் இயக்குகிறார் நடிகை சுஹாசினி!…

குறும்படம் இயக்குகிறார் நடிகை சுஹாசினி!… post thumbnail image
சென்னை:-நடிகை சுஹாசினி இந்திரா படத்தை இயக்கினார். அதில் தான் நடிகை அனுஹாசன் அறிமுகமானார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சுஹாசினி படம் இயக்கப்போவதாக வந்த செய்திகளை அவர் மறுத்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: என்னால் தற்போது திரைப்படங்களை இயக்க முடியாது. காரணம் என் தந்தை சாருஹாசனுக்கு உடல்நலகுறைவு உள்ளது.

ஒரு மகளாக அவரை அருகில் இருந்து கவனிக்க வேண்டியது இருக்கிறது. அதனால் படம் எடுக்கும் யோசனை எதுவும் இல்லை. இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு குறும்படம் இயக்க முடிவு செய்திருக்கிறேன். அதற்கான பணிகளை தொடங்கி இருக்கிறேன். இன்றைக்கு தேவையான ஒரு சமூக விழிப்புணர்வு பற்றிய படம். அதனை ஆங்கிலத்தில் இயக்குவதா, தமிழில் இயக்குவதா என்பது பற்றி முடிவு செய்யவில்லை என்கிறார் சுஹாசினி.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி