சூர்யா, சமந்தா ஜோடியாக நடிக்கும் ‘அஞ்சான்’ படம் தெலுங்கில் ‘சிக்கந்தர்’ என்ற பெயரில் வெளியாகிறது. தெலுங்கு பதிப்புக்கான பாடல் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் சமீபத்தில் நடந்தது. இதில் டைரக்டர் ராஜமௌலி பங்கேற்று பாடல் சி.டி.யை வெளியிட நடிகர் நாகார்ஜூனா பெற்றுக் கொண்டார்.
விழாவில் லிங்குசாமி பற்றி நாகார்ஜூனா பேசும்போது, லிங்குசாமி படங்களை நான் பார்த்திருக்கிறேன். அவர் ஏன் தெலுங்கு படம் எடுப்பதில்லை. அப்படி எடுத்தால் இங்கும் அவருடைய படங்கள் சிறப்பாக வெற்றியடையும். மேலும் கூறும்போது, லிங்குசாமி படத்தில் நான் நடிக்க ஆசைபடுகிறேன் என்று கூறினார். அதற்கு லிங்குசாமி உங்களுக்காக கதை ஒன்று எழுதி இயக்குகிறேன் என்று கூறினார்.
விரைவில் லிங்குசாமி இயக்கத்தில் நாகார்ஜூனா நடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி