செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் முதன்முதலாக வெளியுலகை தொடர்பு கொண்ட அமேசான் பழங்குடியினர்!…

முதன்முதலாக வெளியுலகை தொடர்பு கொண்ட அமேசான் பழங்குடியினர்!…

முதன்முதலாக வெளியுலகை தொடர்பு கொண்ட அமேசான் பழங்குடியினர்!… post thumbnail image
பிரேசிலியா:-பிரேசில்-பெரு எல்லைப்பகுதியில் உள்ள பெருவியன் காடுகளில் வசிக்கும் பழங்குடியினர் மீது போதைபொருள் கடத்தும் கும்பல் தாக்குதல் நடத்தி அவர்களை கொன்றுவருகிறது. அவர்களால் பாதிக்கப்பட்ட பழங்குடியினர் வெளி உலகிற்கு வந்து தங்களுக்கு உதவுமாறு கேட்டுள்ளது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதல் முறையாக வெளியுலகை தொடர்பு கொண்ட பழங்குடியினருக்கு உயிரை கொல்லும் சுவாசக்கோளாறு நோய் இருப்பது தெரியவந்துள்ளது. மானுட சமூக தொடர்பிலிருந்து ஒதுங்கி வாழ்ந்தாலும், அவர்களில் பலர் அந்நோயிலிருந்து மீண்டு வாழ்ந்து வருகின்றனர். பல ஆண்டுகளாகவே காடுகளில் அவர்கள் வாழ்ந்து வருவதாக கூறப்பட்டாலும் முதல் முறையாக தற்போது தான் வெளியுலக தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள அவர்கள் முன்வந்துள்ளனர்.சிம்பாட்டியா கிராமத்தில் உள்ள என்விரா ஆற்றில் ஆடைகளற்ற நிலையில் காணப்பட்ட ஏழு பழங்குடியினர், பிரேசிலின் அசானிங்கா பழங்குடியின உறுப்பினர் ஒருவரை தொடர்பு கொண்டு, போதைப்பொருள் கடத்தல்காரர்களான இந்தியரல்லாதவர்கள் தாக்குவதால் தங்களை தற்காத்துக்கொள்ள ஆயுதம் வழங்குமாறு கேட்டுக்கொண்டனர்.

இந்தியரல்லாதவர்களால் கொல்லப்பட்ட தங்கள் இனத்தை சேர்ந்த மூன்று பேரை ஒரே இடத்தில் புதைத்ததாக தெரிவித்த அவர்கள், மேலும் சிலரது உடல்களை பிணந்தின்னி கழுகுகள் தின்றதாகவும் தெரிவித்தனர். தங்கள் குடில்களை சேதப்படுத்திய போதைபொருட்கள் கடத்தும் கும்பல் தங்களை அங்கிருந்து காலி செய்யும்படி மிரட்டுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.ஏழு ஆதிவாசி பழங்குடியினரின் வீடியோ காட்சி அதிக எண்ணிக்கையில் பார்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி