சில வருடங்களுக்கு முன்னர் மறைந்த நடிகர் ரகுவரன் தனது வில்லத்தனமான நடிப்பிற்கு தமிழ்த் திரையுலகில் தனி இடத்தைப் பெற்றிருந்தவர் ஆவார். இவர் நடிகர் தனுஷின் தந்தையாக ‘யாரடி நீ மோகினி’ படத்தில் நடித்திருந்தார். அப்போது இருவருக்குள்ளும் நல்ல பிணைப்பு ஏற்பட்டிருந்தது.
இவருக்கு மரியாதை செலுத்தும்விதமாக தனுஷ், அமலா பால் நடிப்பில் வேல்ராஜ் இயக்கத்தில் வெளிவந்து தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘வேலையில்லா பட்டதாரி’ திரைப்படத்தில் நாயகனின் பெயரை ரகுவரன் என்று வைத்துள்ளனர்.
ரகுவரனுடன் இணைந்து நடித்த நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று கூறிய தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ், இந்தப் படத்தில் கதாநாயகனின் பெயரை மையமாக வைத்து பிரபலமாகியுள்ள ஒரு வசனத்தையும் குறிப்பிட்டார். ‘அமுல் பேபி, ரகுவரனை நீ வில்லனாகத்தானே பார்த்திருக்க. ஹீரோவாப் பார்த்ததில்லையே. இனிமே பார்ப்பே’ என்ற வசனம் மறைந்த நடிகரான ரகுவரனுக்கான அஞ்சலி என்பதையும் அவர் தெரிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி